கேரள சட்டப்பேரவைக்கு அவமதிப்பு: கவர்னரை திரும்ப பெற தீர்மானம்...சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் மனு

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் ஆரிப் முகமது கானை திரும்ப பெற ஜனாதிபதியை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சபாநாயகரிடம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ்  கொடுத்துள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார். கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  சபாநாயகர் அனுமதியுடன்தான், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவர்னரும் சட்டப்பேரவையின் ஒரு பாகம்தான். ஆனால், தீர்மானத்தை புறக்கணித்ததாலும், சட்டப்பேரவை  கூடியது தொடர்பாக கிண்டல் செய்ததாலும் அவையின் மதிப்பையும் பெருமையையும் கவர்னர் குறைத்துவிட்டார்.

இதற்கு முன்பும் சட்டப்பேரவையில் இதுபோல் மத்திய அரசிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில் கவர்னருக்கு எதிர்ப்பு இருந்தால் அதை சபாநாயகருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருக்க வேண்டும்.  வெளிப்படையாக சட்டப்பேரவையை அவமானப்படுத்தும் வகையில் கவர்னர் நடந்துக் கொண்டதை ஏற்க முடியாது. இதற்கு முன் கேரளாவில் இருந்த எந்த கவர்னரும் அரசுடனோ, எதிர்க்கட்சிகளிடமோ இதுபோல் மோதல் போக்கை கடை  பிடித்ததில்லை. ஜனநாயக நாட்டிற்கு இது உகந்தது அல்ல. எனவே கவர்னரை திரும்ப பெற ஜனாதிபதியை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீரமானம் ெகாண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இது ெதாடர்பாக சபாநாயகரிடம் நோட்டீஸ்  கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

‘உரிமை உண்டு’

கவர்னர் ஆரிப் முகமது கான் கூறுகையில், ‘‘மரபுப்படி கவர்னர் தான் ஒரு மாநிலத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பார். அரசுக்கு அறிவுரை கூறவும் எச்சரிக்கை கொடுக்கவும் சட்டப்படி எனக்கு அதிகாரம் உண்டு. அதை மோதல் ேபாக்காக  யாரும் எடுத்துக் கொள்ள கூடாது. ஜனாதிபதிதான் என்னை நியமித்தார் .என்னை திரும்ப பெறக் கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். அது சட்டப்படி செல்லுமா என்பதை அவர்கள்தான்  முடிவு செய்யவேண்டும். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு’’ என்றார்.

Related Stories: