50 பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் 50க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், கெமிக்கல்ஸ், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.  சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 56 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

எனவே இதைக் கருத்தில் கொண்டு இந்த பொருட்களின் மீது இறக்குமதி வரியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு, தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானதும், மொபைல் போன் சார்ஜர்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இரசாயணங்கள், விளக்குகள், மரத்தில் செய்யப்பட்ட மேஜை, நாற்காலி, சோபா, கட்டில், பீரோ உள்பட அனைத்து  பொருட்கள், மெழுகுவர்த்தி, நகைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது.

Related Stories: