பா.ஜ வேட்பாளர் பிரசாரத்துக்கு ஆணையம் தடை

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மாடல் டவுன் பாஜ வேட்பாளர் கபில் மிஸ்ரா, அடுத்த 48 மணி நேரம் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  கபில் மிஸ்ரா 2 நாளுக்கு முன் டிவிட்டர் பதிவில், ‘‘டெல்லி தேர்தல் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் போன்றது. பாஜ ஆட்சியை பிடிக்கும். கெஜ்ரிவால் ராஜினாமா செய்வார். ஷாஹின் பாக்கில் மினி பாகிஸ்தான் உருவாகி உள்ளது’’ எனக்  கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இதுகுறித்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், அவர் 48 மணி நேரம் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. மேலும் அவர் மீது வழக்குபதியவும் உத்தரவிட்டுள்ளது.

Tags : Commission ,candidate ,BJP , Commission banned from campaigning for BJP candidate
× RELATED நீண்ட இழுபறிக்குப் பிறகு காவிரி ஆணையம் இன்று டெல்லியில் கூடுகிறது