பா.ஜ.வின் வெறுப்பு கொள்கையை எதிர்ப்பவர்களை எல்லாம் நகர்ப்புற நக்சல்கள் என்கின்றனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பா.ஜ.வின் வெறுப்பு கொள்கையை எதிர்ப்பவர்கள் எல்லாம், நகர்ப்புற நக்சலைட்கள் என கூறப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.  மகாராஷ்டிராவில் கடந்த 2018ம் ஆண்டு பீமா - கோரேகான் போர் வெற்றியின் 200வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் நடந்த வன்முறையில் ஒருவர் பலியானார். இதை தொடர்ந்து இச்சம்பவத்தை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதில் ஒருவர் பலியானார்; 30க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து புனே போலீஸ் அதிகாரிகளுடன், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) எடுத்துக் கொண்டது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, ‘‘பா.ஜ.வின் வெறுப்பு கொள்கைளை எதிர்ப்பவர்கள் எல்லாம் நகர்ப்புற நக்சல்களை போல் சித்தரிக்கின்றனர். பீமா - கோரேகான் சம்பவம்  எதிர்ப்பின் அடையாளம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: