பிப்.3ல் மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: வைகோ தலைமையில் நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாவது கட்டமாக மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவியிடங்கள் மற்றும் விடுபட்ட 7 மாவட்டங்களிலும்  உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மதிமுக சார்பில் எந்தெந்த ஒன்றிய வார்டு கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் இடங்களில் போட்டியிடலாம் என்பது தொடர்பாக  ஆலோசிக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் பிப்.3ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக உயர்நிலை குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் பிப்ரவரி 3ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவை தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இடங்கள் தொடர்பான பட்டியல் தயார் செய்யப்பட்டு திமுக தலைமையிடம் அளிக்கப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் குடியுரிமை திருத்த  சட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மதிமுக சார்பில் முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: