பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு: 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிப்பு

டெல்லி: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை நடைபெறும் விழாவில் பத்மஸ்ரீ விருது 118 பேருக்கு வழங்கப்பட உள்ளது. 7 பேருக்கு பத்ம விபூஷன் ,16 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னான்டஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷன் விருது

* மறைந்த முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன் விருது

* வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் டிவிஎஸ் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷன் விருது

* விளையாட்டு பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பதம் விபூஷண் விருது

* இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது

* தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷன் விருது

* தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு பூஷன் விருது

* கோவா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பூஷன் விருது

* தொழில் துறையை சேர்ந்த ஆனந்த்மகேந்திராவுக்கு பூஷன் விருது

* இலக்கியம் மற்றும் கல்வித்துறை சேர்ந்த புதுச்சேரியை சேர்ந்த மனோஜ் தாஸுக்கு பூஷன் விருது

* வி.கே. முனுசாமி கிருஷ்ண பக்தர் உள்ளிட்ட 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

பத்மஸ்ரீ விருது

* தமிழகத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும் சமூக சேவகர் அறிவிப்பு

* பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜாவுக்கு பத்மஸ்ரீ விருது

* உ.பி.,யை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ விருது

* பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது

* தமிழகத்தை சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

* பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

* கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

* தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய பிரதீப்புக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

பத்ம விபூஷண் விருது

விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: