அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன: ஒரத்தநாடு மக்கள் நிம்மதி

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு  திருவள்ளுவர் நகர் பகுதியில் சமீபகாலமாக குரங்குகளின் அட்டகாசம்  அதிக அளவு இருந்து வருகிறது. கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அள்ளிச்சென்று விடுகிறது.  சமைத்து வைத்திருந்தால் பாத்திரத்துடன் உணவை எடுத்து சென்று விடுகிறது. வீடுகளுக்குள் புகுந்த குரங்குகளை விரட்ட முயன்றால் அது எதிர்த்து வந்து மிரட்டுகிறது. சில நேரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளையும் கடித்து காயப்படுத்தி விடுகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர் இதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் தஞ்சை வனத்துறை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் ஒரத்தநாடு வந்து திருவள்ளுவர் நகர் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றார்இதனால் அப்பகுதியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: