வேலூர் புதிய பஸ் நிலைய கிழக்கு பகுதியில் இருந்து சென்னை, திருப்பத்தூர் பஸ்கள் பிப்.9ம் தேதி முதல் இயக்கம்

வேலூர்: வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் ஓரடுக்கு பஸ் நிலையமாக கட்டப்பட உள்ளது. மேலும் நவீன பஸ் நிலையத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும், போக்குவரத்து மாற்றம் குறித்தும் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பே அனைத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வணிகர் சங்கங்கள் போன்ற பல்ேவறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ45.61 கோடியில் அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட உள்ளது. அதுசமயம் புதிய பஸ் நிலையத்தில் இயங்கி வரும் சென்னை மார்க்கம் மற்றும் திருப்பத்தூர் மார்க்கம் தவிர்த்து, ஏனைய பஸ்கள் அனைத்தும், பழைய பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும். சென்னை, திருப்பத்தூர் மார்க்கம் செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தின் கிழக்கு பக்கத்திலிருந்து வரும் 9ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

புதிய பஸ் நிலையம் 2 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்ட உடன், அனைத்து புறநகர் பஸ்களும் இங்கிருந்து இயங்கும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related Stories: