×

அனல் பறக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை: அமித்ஷாவின் பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

டெல்லி: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கடின உழைப்பை கேலி செய்ய வேண்டாம் என அமித்ஷாவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுரை வழங்கி உள்ளார். வருகிற பிப். 8ம் தேதி நடக்கவுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த கடைசி நாளில், 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 800க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தம் 1,029 வேட்பாளர்களில் 187 பெண்கள். வேட்பு மனுக்களை நேற்றுடன் திரும்பப் பெறலாம். இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே ஒரு மும்முனை போட்டி நிலவுகிறது.

பிப். 8ம் தேதி வாக்குப்பதிவும், பிப். 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில், 1.46 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாக்கு உரிமையை பயன்படுத்த தகுதியுடையவர்கள். இந்நிலையில் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி கூறுைகயில், “பிப். 8ம் தேதி டெல்லி பேரவை தேர்தலுக்கு 698 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள்  வாக்கெடுப்பு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவாலுக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது.

அமித்ஷா தெரிவித்த குற்றச்சாட்டு அனைத்திற்கும் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா; ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் 1000 பள்ளிகள் திறக்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். எங்கே அந்த பள்ளிகள் என அவர் விளக்கம் அளிக்க முடியுமா. டெல்லியில் நன்றாக நடந்து கொண்டிருந்த பள்ளிகளை நாசமாக்கியது தான் ஆம் ஆத்மி அரசின் சாதனை’’ என அமித்ஷா குற்றம் சாடினார்.இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; அமித்ஷா ஜி, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள ஒரு பள்ளியைப் பற்றி சிறப்பாகச் சொல்ல முடியுமா? அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கடின உழைப்பை கேலி செய்ய வேண்டாம் என கூறினார்.

Tags : Arvind Kejriwal ,speech ,Amit Shah , Delhi Assembly elections, Amit Shah, Arvind Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...