ஆலோசகர்களை நம்பி இருக்கு அரசியல் கட்சிகள்: தேசிய வாக்காளர் தினவிழாவில் தலைமை செயலாளர் சண்முகம் உரையாடல்

சென்னை:  அரசியல் கட்சிகள் மக்களை அணுகுவதை விட்டுவிட்டு ஆலோசகர்களை நம்பி இருக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தேசிய வாக்காளர் தினவிழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் ரோகித் விழாவை தொடக்கிவைத்தார். இதில் கலந்துகொண்ட அதிகாரிகள் வலிமையான மக்களாட்சி, வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உரையாற்றினர். மாநில அரசின் தலைமை செயலாளர் சண்முகம்  பேசியபோது கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் வெற்றிகளுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களை நாடும் நிலையிக்கு ஆளாகியிருக்கின்றன.

அந்த வகையில் அரசியல் கட்சிகளுடன் பணியாற்றுவதில் ஓ.எம்.ஜி, ஐபேக்  போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது முன்னிலையில் உள்ளன. இம்மாதிரியான நிறுவனங்களுக்கு தனிப்பட்ட அரசியல் பார்வை என்று எதுவும் கிடையாது. அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணம் மற்றும் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து இவை ஆலோசனைகளை வழங்கும். இதில் நம்பர் ஒன்னாக இருப்பது ஐபேக் அதாவது இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி.  இந்நிறுவனத்தை இயக்குபவர் பிரசாந்த் கிஷோர்.  நித்திஷ் குமார், ஜெகன் மோகன் ரெட்டி என பல அரசியல் தலைவருக்கு இவர் வேலை பார்த்துள்ளார்.  இதுஒரு புறம் இருக்க, தற்பொழுது தமிழக அரசியல் தலைவர்களும் இவர்களை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அரசியல் கட்சிகள் தங்களை வழிநடத்த அரசியல் ஆலோசகர்களை கொண்டுவருவது ஆச்சரியமாக உள்ளது.  அவர்கள் வந்து ஆய்வு செய்து எப்படி மக்களை புரிந்து கொள்ள முடியும். மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருக்கிறது. மக்களாட்சியில் அனைவரும் மன்னர்கள் என்பது செயல்பாட்டில் கொண்டுவருவது மிக மிக கடினம் என்றும், சாதி மதத்தை பயன்படுத்தி சுயநல நோக்கத்தோடு வாக்கு சேகரிப்பது ஆபத்தானது எனவும் தெரிவித்தார். சாதி, சமய பாகுபாடு பார்க்காமல் வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சாதி அமைப்புகள், முகநூல் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் மக்களை மூளைசலவை செய்வது ஆபத்தானது என்றும் தெரிவித்தார்.

Related Stories: