பெரிய கோயில் குடமுழுக்கையொட்டி தஞ்சை மாநகரை கண்காணிக்க 192 கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்

தஞ்சை, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கையொட்டி மாநகர் பகுதியை கண்கானிக்க 192 சிசிடிவி கேமாரக்கள் பொருத்தும் பணி துவங்கியது. தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜை வரும் 1ம் தேதி தொடங்கிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வர வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி குடமுழுக்குக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு செல்லும் வகையில் தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் காவல் கட்டுப்பாட்டு அறை, கோயில் முன் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளன. 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளனர்.

இதையும் தாண்டி கோயிலின் உள்புறத்தில் திருச்சுற்று மாளிகை, சன்னதிகள், நுழைவு வாயில் என 32 சிசிடிவி கேமாரக்களும், நகரை சுற்றி அனைத்து இடங்களிலும் 160 சிசிடிவி கேமாரக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து திருப்பணிக்குழு தலைவர் துரை.திருஞானம் கூறியதாவது: குடமுழுக்குக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில் 192 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு முறை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு முடிந்த பிறகு இந்த கேமாரக்கள் நிரந்தமாக நகரிலும், கோயில்களிலும் செயல்பாடுகளில் இருக்கும். அத்துடன் நிகழச்சிகளை காண 10 இடங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகளும், கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகர் முழுவதும் அறிவிப்புகளை வெளியிடும் வகையில் ஒலி பெருக்கிகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: