×

குரூப்-4 தேர்வை தொடர்ந்து இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு என புகார்: டிஎன்யுஎஸ்ஆர்பி மறுப்பு

சென்னை: இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் நடந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தவர்கள் தேர்வானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டர் ஃபையர்மேன் பதவிகளுக்கான 8,826 இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை தீயணைப்பு காவலர்கள், இரண்டாம் நிலை சிறை காவலர்கள், இரண்டாம் நிலை ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 8,826 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள், 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள், 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8826 பணியிடங்கள். இது தவிர மற்ற பணியிடங்கள் 62 என மொத்தம் 8888  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6- ஆம் தேதி வெளியிடப்பட்டது. tnpsc தேர்வில் குரூப்-4 தேர்வில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 தேர்வு மையங்களில் இருந்த 99 பேர் தேர்வு செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் நடந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தவர்கள் தேர்வானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் மாறுபடும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags : guard examination , Group-4, Secondary Guard Examination, Abuse
× RELATED 2ம் நிலை காவலர் தேர்வை ரத்து செய்யக்...