×

கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

ஜெய்ப்பூர்: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சிஏஏ) எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு கேரளா சட்டசபையில் முதன் முதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக கூறி, சிஏஏ-வை மத்திய அரசு திரும்பப் பெற அந்த தீர்மானம் வலியுறுத்தியது. தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும்  சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டசபையில் பல்வேறு பா.ஜ., உறுப்பினர்கள் சிஏஏ.,க்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையிலும் சிஏஏ.,வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. சிஏஏ.,வுக்கு எதிராக தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கூறி இருந்தும் அதற்கு எதிராக காங்., ஆளும் மாநிலங்கள் ஒவ்வொன்றாக தீர்மானம் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, வருகிற 27ம் தேதி மேற்குவங்க சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று, அம்மாநில முதல்வரும், திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்தது  குறிப்பிடத்தக்கது.


Tags : passage ,Rajasthan Assembly ,states ,Kerala ,Punjab , Citizenship, Punjab, Assembly, Resolution, Amendment, Executive, Rajasthan
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து