கே.சி.பழனிசாமியிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை: 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை:  அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி, கே.சி.பழனிசாமியிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கே.சி.பழனிசாமி அவரது இணையதளம், லெட்டர் பேட் ஆகியவற்றில் அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. கட்சிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அதிமுகவில், தான் தொடர்ந்து இருப்பதாக செயல்பட்டதை கண்டித்து முத்து கவுண்டன் புதூர் அதிமுக ஊராட்சி தலைவர் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் காலை 4.30 மணிக்கு லாலிசாலையில் உள்ள  கே.சி.பழனிசாமி வீட்டிற்கு காவலர்கள் சென்றனர்.

சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 6.30 மணியளவில் அவரை கைது செய்து காவல்த் துறை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். கே.சி.பழனிசாமி மீது ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல், பொய்யான ஆவணங்களை உருவாக்குதல், தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சூலூர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, கையெழுத்திட வருவோர் சோதனைக்குட்படுத்தி விசாரணைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories: