இந்தியா - பிரேசில் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

டெல்லி : டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி - பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ முன்னிலையில் இரு நாடுகள் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக, பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ 4 நாள் பயணமாக தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இந்தியா வந்தடைந்தார். இதையடுத்து, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி - பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையே இணையதளப் பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை நல்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நாட்டின் 71-ஆவது குடியரசு தினம், வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபா் பொல்சொனரோ கலந்து கொள்கிறாா். இதற்காக, 4 நாள் பயணமாக, அதிபா் தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தாா். விமான நிலையத்தில் அவா்களுக்கு நாட்டிய நிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரேசில் அதிபரின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி பிரேசில் அதிபரை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். பிரேசில் அதிபரின் வருகை இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின்போது, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்,குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்துகிறார். பொல்சொனாராவுடன் 8 அமைச்சா்கள், 4 எம்.பி.க்கள், அரசின் மூத்த அதிகாரிகள், தொழிலதிபா்கள் குழுவினா் ஆகியோரும் வந்துள்ளனா்.

Tags : Brazil ,India ,MoU , Memorandum of Understanding, Agreements, Signatures, Prime Minister Narendra Modi, Brazil
× RELATED பிரேசிலில் இருந்து கொகைன் கடத்திய...