2019-20ல் 3ம் காலாண்டில் இந்தியன் வங்கி லாபம் 67 சதவீதமாக அதிகரிப்பு: நிர்வாக இயக்குநர் பேட்டி

சென்னை: 2019-20 நிதியாண்டின் 3ம் காலாண்டில் இந்தியன் வங்கியின் செயல்பாட்டு லாபம் 67 சதவீதம் அதிகரித்து 1,919 கோடியாக உள்ளதாக  வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு கூறினார். இந்தியன் வங்கியின் 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு, நிர்வாக குழுவினர் கூறியதாவது: 2019-20 நிதியாண்டின் 3ம் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் 67 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 1,919 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே 3ம் காலாண்டில், 1,147 கோடி ரூபாயாக இருந்தது. 3ம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம், 62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 247 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு, 152 கோடி ரூபாயாக இருந்தது.

வங்கியின் மொத்த வருவாய், 23 சதவீதம் வளர்ச்சிபெற்று, 6,506 கோடி  அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு, 5,269 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வணிகம் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 4.50 லட்சம் கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வைப்பு தொகை, 14 சதவீதம் அதிகரித்து, 2.58 லட்சம் கோடியாக உள்ளது.  மொத்த வாராக் கடன் 7.20 சதவீதமாக குறைந்துள்ளது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியன் வங்கி முன்னோடியாக உள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்கு, பென்சன் கணக்குகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடன் வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கியை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Related Stories: