×

சாலை விபத்தில் இளைஞரை கொன்ற தூதரின் மனைவியை ஒப்படைக்க முடியாது: அமெரிக்கா அறிவிப்பு; பிரிட்டன் அதிர்ச்சி

லண்டன்:  பிரிட்டனில் உள்ள நார்த்தம்டன்ஷைர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க தூதரின் மனைவி அன்ன சகோலஸ் ஓட்டிச் சென்ற கார்,  மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஹாரிடன் (19) என்ற இளைஞர் மீது மோதியது. இதில் ஹாரிடன் இறந்தார். இதையடுத்து, அமெரிக்காவுக்கு தப்பி சென்ற சகோலசை திரும்ப ஒப்படைக்குமாறு  அமெரிக்காவுக்கு பிரிட்டன் அரசு வேண்டுகோள் விடுத்தது.   தூதர், அவர்களின் குடும்பத்தினர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய முடியாது என்ற  சட்டத்தை சுட்டிக்காட்டி பிரிட்டனின் கோரிக்கையை அமெரிக்க அரசு நேற்று நிராகரித்தது. அமெரிக்கா- பிரிட்டன் இடையே நெருங்கிய நட்பு நிலவுகிறது.

அப்படி இருந்தும் தனது கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது பிரிட்டனுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.  இது தொடர்பாக பிரிட்டன் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதி கிடைப்பதை மறுப்பதுபோல் தோன்றுகிறது,’’ என்றார்.


Tags : Ambassador ,road accident ,Britain , Road Accident, Murder of a Youth, Ambassador's Wife, USA, UK
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...