கடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி உதை: 2 பேர் கைது

பல்லாவரம்: பல்லாவரம், இளங்கோ தெருவை சேர்ந்தவர் தேவிகா (43). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டின் அருகே வசித்து வந்த விமலா (50) என்பவருக்கு லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனை  குறிப்பிட்ட தேதியில் திருப்பிக் கொடுக்காமல் விமலா காலம் கடத்தி வந்துள்ளார்.  இதனையடுத்து நேற்று முன்தினம் தேவிகா, தனது கணவர் ராமதாஸ் (46) என்பவருடன் விமலா வீட்டிற்கு சென்று, வாங்கிய கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதில் தேவிகா மற்றும் விமலா ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விமலாவின் கணவர் முனியன் (55) மற்றும் உறவினர் பாலா (35) ஆகியோர் சேர்ந்து, தேவிகாவையும் அவரது கணவர் ராமதாசையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Advertising
Advertising

இதில் மனைவியின் கண்ணெதிரே ராமதாசுக்கு பல் உடைந்தது. தேவிகாவுக்கும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேவிகா மற்றும் அவரது கணவர் ராமதாசை தாக்கிய குற்றத்திற்காக முனியன், பாலா ஆகிய இருவரை கைது செய்தனர்.

Related Stories: