திருப்பதி குறித்து அவதூறை தடுக்க சைபர் கிரைம் பிரிவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பிரசாரங்கள்  பதிவு செய்து பரப்பப்பட்டு வருகிறது. இதை தடுத்து கண்காணிக்க சைபர் குற்றத்தடுப்பு தனிப்பிரிவை ஏற்பாடு செய்ய கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ள இன்போசிஸ் நிறுவன தலைவர் சுதா நாராயணமூர்த்தியின் நிறுவனத்திடம் இருந்து இதற்கு தேவையான உதவிகள் பெறப்பட உள்ளது. மேலும் திருமலை டிஎஸ்பியாக உள்ள பிரபாகர்பாபு, சைபர் குற்றத்தடுப்பு மற்றும் சமூக வலைதள கண்காணிப்பு பிரிவை கவனிக்கும் விதமாக பணியமர்த்த வேண்டும் என மாநில டிஜிபிக்கு தேவஸ்தானம் பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Cyber Crimes Division ,Tirupati Tirupati on Cyber Crimes Division Prevent Slander , Tirupati, Cyber Crime Division
× RELATED சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை