டெல்லியில் உள்ள அரசு இல்லத்தில் சரத் பவாருக்கு அளித்த பாதுகாப்பு திடீர் வாபஸ்: மத்திய அரசு நடவடிக்கை

மும்பை: டெல்லியில் உள்ள சரத்பவாரின் அரசு இல்லத்தில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. எனினும், மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கட்சித் தலைவர்களை மிரட்ட முடியாது என்று மகாராஷ்டிரா அமைச்சரும் தேசியவாத காங்கிரசின் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் கூறினார். மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவாருக்கு  டெல்லியில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், எண் 6. ஜன்பாத் அரசு இல்லத்துக்கு ஜனவரி 20ம் ேததிக்கு பிறகு பாதுகாப்பு வீரர்கள் வருவதை நிறுத்தி விட்டதாகவும் அரசிடம் இருந்து முன்கூட்டியே இது குறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றும் நவாப் மாலிக் கூறினார்.

மகாராஷ்டிராவில் அரசு அமைக்க முடியாததால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.  மகாராஷ்டிராவில் சரத் பவாருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய தேசியவாத காங்கிரஸ் சிவசேனா தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கிறது.

Related Stories: