குடியுரிமை திருத்த சட்டத்துக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறும் வங்கதேச மக்கள் அதிகரிப்பு: எல்லைப் பாதுகாப்பு படை தகவல்

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து சொந்த நாட்டுக்கு செல்லும் வங்கதேச அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு போட்டியாக, இந்த சட்டத்தை ஆதரித்து அனைத்து மாநிலங்களிலும் பாஜ சார்பாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து தங்களின் சொந்த நாட்டுக்கு செல்வதற்காக வெளியேறும் வங்கதேச அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படை ஐஜி குரானி கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்ட விரோத வங்கதேச அகதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 268 வங்கதேச அகதிகள், நாட்டை வெளியேற முயற்சித்துள்ளனர்.. குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக, இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.

Related Stories: