தர்மபுரி கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மீது அவமதிப்பு வழக்கு

தர்மபுரி: தர்மபுரி வள்ளலார் திடலில், கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி, திமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர், துணை முதல்வர் மற்றும் தமிழக அரசை பற்றி விமர்சனம் செய்து அவதூறாக பேசியதாக, தர்மபுரி மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் பசுபதி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை, நேற்று நீதிபதி கந்தகுமார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். பின்னர், வரும் பிப்ரவரி 24ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags : MK Stalin ,court ,Dharmapuri , Dharmapuri Court, MK Stalin, contempt case
× RELATED தன் மீதான அவதூறு வழக்கை ரத்து...