×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு மண்டியிட்டு விவசாயிகள் போராட்டம்: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

கடலூர்: ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி கடலூரில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய நிலையில், ஆட்சியர் அன்புச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தலைமையில் அருள்முருகன், பாலமுருகன், ஆனந்தமலை உள்ளிட்ட விவசாயிகள் கைகளில் கயிறு கட்டிக்கொண்டு, மண்டியிட்டு, ஆட்சியர் முன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப திரும்ப பெற வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என முழக்கமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன போராட்டம் குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று விவசாயிகள் தங்கள் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கூட்டம் நடந்தது.

Tags : Hydro-carbon, project, disallow, kneel, growers, struggle
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை