இரக்கமே இல்லாமல் உயரும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.104 உயர்ந்து ரூ.30,592க்கு விற்பனை

சென்னை : நேற்று சற்று சரிந்த நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,824க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,592க்கு விற்கப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.00க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.100 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.50,000க்கு விற்கப்படுகிறது.

Related Stories: