சிவகாசி அருகே சிறுமி பலாத்கார கொலை வடமாநில வாலிபர் கைது போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகை

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் உள்ள, முட்புதர் பகுதியில் கடந்த 20ம் தேதி மாலை, 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.சம்பவம் நடைபெற்ற சித்துராஜபுரம் தனியார் பள்ளி சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து அசாம் மாநிலம், நல்பேரி மாவட்டத்தை சேர்ந்த மோஜம் அலி (22), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விட்டு தப்பியது தெரியவந்தது. இவரை சிவகாசி டவுன் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் சிவகாசி டவுன் ஸ்டேஷனை சித்துராஜபுரம் சலவைத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு, ‘குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ எனக்கோரி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: