×

அரசு ஊழியர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுங்கள்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

சென்னை: ஓய்வுபெறும் நாளில், தற்காலிக பணிநீக்கம் செய்த அரசு ஊழியர் மு.சுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராகவும் பொறுப்பில் இருந்தவரான மு.சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக கடந்த 31.5.2019 அன்று ஓய்வு பெற இருந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதாக கூறி, 31.5.2019 பணி ஓய்வுபெறும் நாள் அன்று தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் 32 ஆண்டுகள் அரசு பணியை நேர்மையோடு நிறைவேற்றி உள்ளார். எனவே, மு.சுப்பிரமணியன் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளை இறுதிப்படுத்தி, அவரது தற்காலிக பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும். அவருக்கு ஓய்வுகால பயன்கள் கிடைத்திட ஆணைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government employee, charge, cancellation, civil servants union, demand
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...