தாலுகா அளவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:  

உச்ச நீதிமன்றம் நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பது சம்பந்தமாக மத்திய அரசு முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. எனவே, மத்திய அரசு நாட்டின் அனைத்து தாலுகாக்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முன்வருமேயானால் பொது மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள் இப்பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்று முன்னேற வாய்ப்பு உருவாகும். எனவே, மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 5,464 தாலுகாக்களில் ஒவ்வொரு தாலுகாவிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து மாணவர்களின் கல்விக்கு உதவிட வேண்டும்.

Related Stories: