ராமர் பாலத்தை வரலாற்று சின்னமாக அறிவிக்க மனு

புதுடெல்லி: இந்தியா-இலங்கை இடையே அமைந்துள்ள ராமர் பாலத்தை பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பாக 3 மாதத்திற்குப் பிறகு மனு செய்யும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு, ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் கடந்த 2007ல் சேது சமுத்திர கால்வாய் அமைக்கும் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, இங்கு ராமர் பாலம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ராமர் பாலம் இருப்பதாக மத்திய அரசும் ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ராமர் பாலத்தை பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டே முன்பு நேற்று இடைக்கால விண்ணப்பம் வழங்கப்பட்டது. அப்போது, இது தொடர்பாக 3 மாதத்திற்குப் பிறகு மனு செய்யுமாறு தலைமை நீதிபதி  மனுதாரரின் வக்கீலிடம் அறிவுறுத்தினார்.

Related Stories: