×

71 ஆயிரம் பல் குத்தும் குச்சியில் தேசியக்கொடி

புதுடெல்லி: நாட்டின் 71வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ராணுவ அணிவகுப்பு, விமானப்படை சாகச நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பல்ஜிந்தர் சிங், 71 ஆயிரம் பல் குத்தும் குச்சிகளைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கி அசத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ``நாட்டின் 71வது குடியரசு தினத்தையொட்டி 71 ஆயிரம் பல் குத்தும் குச்சிகளை கொண்டு தேசியக் கொடியை உருவாக்கி உள்ளேன். இதற்கு 40 நாட்களானது,’’ என்றார்.

Tags : 71 thousand, toothpick stick, national flag
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...