15 சவரன் கொள்ளை

ஆலந்தூர்: நங்கநல்லூர், கண்ணையா தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (35). சேத்துபட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மனைவி கடந்த 16ம்  தேதி குடியாத்தத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு  சென்றுவிட்டார். இந்நிலையில்  ஞானசேகரனும் அலுவலக பணி நிமித்தமாக  ஐதராபாத் சென்றுவிட்டார். ஞானசேகரன் நேற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த  இருந்த 15 சவரன் நகை, மற்றும் 15 ஆயிரம்  ரொக்கம்  கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஞானசேகரன்  பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு  பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: