டி20 உலக கோப்பை பறந்தது இந்திய மகளிர் அணி

மும்பை:ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள  மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நேற்று புறப்பட்டது. ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்.21ம் தேதி முதல்  மார்ச் 8ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டியில் இந்தியா, ெவஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா,  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து,  இலங்கை  என  10 நாடுகள் பங்கேற்கின்றன. முதல் போட்டி இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில்  பிப்.21ம் தேதி சிட்னியில் நடைபெறும்.  உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றது. உடன் பயிற்சியாளர் டபிள்யூ.வி.ராமன் , அணி நிர்வாகிகள், உதவியாளர்கள் புறப்பட்டுச் சென்றனர். அங்கு உலக கோப்பைக்கு முன்பு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாட உள்ளது.

Advertising
Advertising

Related Stories: