புதுடெல்லி: பிஎப் இணையதளத்தில் சந்தாதாரர்களுக்கு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒரு நிறுவனத்தில் பணியாற்றி விலகிய ஒருவர், பணி விலகல் தேதியை தானே பதிவேற்றம் செய்ய முடியும். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர், பணியில் இருந்து விலகிய பிறகு, தொழிலாளர் பணியில் இருந்து விலகிய தேதியை அவர் வேலை பார்த்த நிறுவனம்தான் பதிவேற்ற முடியும். ஆனால், புதிய வசதிப்படி நிறுவன பணியில் இருந்து விலகிய தொழிலாளர் தொடர்ந்து 2 மாதங்களுக்கு வேறு வேலையில் சேராமல் இருந்தால் அவரே பணி விலகல் தேதியை பிஎப் இணையதளத்தில் மாற்றிக்கொள்ளலாம். அந்த தேதி, பழைய நிறுவனம் அந்த தொழிலாளர் கணக்கில் பிஎப் சந்தாவை கடைசியாக கட்டிய மாதத்தில் எந்த ஒரு தேதியாகவும் இருக்கலாம். பிஎப் இணையதளத்தில் தொழிலாளர்கள் தங்களது பிஎப் எண், பாஸ்வேர்டு உள்ளீடு செய்து நுழைந்த பிறகு, ‘manage’ என்பதை கிளிக் செய்து, ‘mark exit’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.