×

பணி விலகல் தேதியை பதிவு செய்யலாம்: பிஎப் இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம்

புதுடெல்லி: பிஎப் இணையதளத்தில் சந்தாதாரர்களுக்கு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒரு நிறுவனத்தில் பணியாற்றி விலகிய ஒருவர், பணி விலகல் தேதியை தானே பதிவேற்றம் செய்ய முடியும்.   ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர், பணியில் இருந்து விலகிய பிறகு, தொழிலாளர் பணியில் இருந்து விலகிய தேதியை அவர் வேலை பார்த்த நிறுவனம்தான் பதிவேற்ற முடியும். ஆனால், புதிய வசதிப்படி நிறுவன பணியில் இருந்து விலகிய தொழிலாளர் தொடர்ந்து 2 மாதங்களுக்கு வேறு வேலையில் சேராமல் இருந்தால் அவரே பணி விலகல் தேதியை பிஎப் இணையதளத்தில் மாற்றிக்கொள்ளலாம். அந்த தேதி, பழைய நிறுவனம் அந்த தொழிலாளர் கணக்கில் பிஎப் சந்தாவை கடைசியாக கட்டிய மாதத்தில் எந்த ஒரு தேதியாகவும் இருக்கலாம்.  பிஎப் இணையதளத்தில் தொழிலாளர்கள் தங்களது பிஎப் எண், பாஸ்வேர்டு உள்ளீடு செய்து நுழைந்த பிறகு, ‘manage’  என்பதை கிளிக் செய்து, ‘mark exit’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் ‘select employment’ என்பதை தேர்வு செய்து, யுஏஎன் உடன் இணைந்த பிஎப் கணக்கு எண்ணை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வேலையில் இருந்து விலகிய காரணம் மற்றும் விலகிய தேதியை பதிவு செய்ய வேண்டும்.  இதன்பிறகு அந்த கணக்கில் இணைக்கப்பட்ட ஆதாருடன் தொடர்புடைய மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு வரும். இதை உள்ளீடு செய்து உறுதி செய்யலாம். ஆனால், ஒரு முறை தேதியை உறுதி செய்த பிறகு, எந்த காரணத்தை முன்னிட்டும் அதை திருத்தவோ, மாற்றவோ முடியாது. சில நிறுவனங்கள் தாமதமாக பணி விலகல் தேதியை பதிவேற்றம் செய்வதால், தொழிலாளர் வேறு நிறுவன கணக்கிற்கு பணத்தை மாற்றுவது அல்லது பணத்தை எடுக்க தாமதம் ஆகிறது. இதை தவிர்க்கவே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என பிஎப் அதிகாரிகள் கூறினர்.

Tags : PF , Dissolution of work, PF website
× RELATED ரூ.2 லட்சம் லஞ்சம் பி.எப். அதிகாரி கைது