ஆஸி.யில் புழுதிப்புயலுடன் மழை; நிறம் மாறியது யர்ரா ஆறு

மெல்போர்ன்; ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புழுதிப்பயுலுடன் கனமழை பெய்ததால் ஆற்றில் பழுப்பு நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு புழுதிப்புயலுடன் கனமழை பெய்தது. மெல்ேபார்ன் நகரில் 23 மில்லி மீட்டர் அளவுக்கு கனமழை பெய்தது. விக்டோரியாவில் 1996ம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக மிக குளிரான நாளாக இது இருந்தது. வழக்கமாக இந்த மாதத்தில் பெய்யும் மழையை விட இது இருமடங்காக இருந்தது. புழுதி கலந்து பெய்த மழையால் மெல்போர்ன் நகரமே சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

இதனால் பல நீச்சல் குளங்களில் சேறுகலந்த நீராக மாறியதால் அவை தற்காலிகமாக மூடப்பட்டன. அப்பகுதியில் பயணம் செய்த கார்களும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மெல்போர்ன் நகரில் பாயும் யர்ரா ஆற்றில் செம்மண் கலந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஆறே பிரவுன் கலரில் மாறியது. தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடமேற்கு விக்டோரியாவிலும் புழுதிப்புயலுடன் மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் ஏராளமான மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: