×

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக கூறி தேனி அதிமுக எம்பியை முற்றுகையிட்டு கருப்புக்கொடி

* காரை மோதுவது போல சென்றதால் பரபரப்பு
* கம்பத்தில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது

கம்பம்: தேனி அதிமுக எம்பி ரவீந்திரநாத்குமாருக்கு கருப்புக்கொடி காட்டியவர்கள் மீது அவரது கார் மோதுவது போல் சென்றது. இதனைக் கண்டித்து மறியல் செய்த 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம்,  கம்பத்தில் நேற்று இரவு எம்ஜிஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி எம்பியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமாகிய  ரவீந்திரநாத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு கருப்பு கொடி காட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் அப்பகுதியில் திரண்டனர்.

இதனால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மாலை 6 மணிக்கு வருவதாக இருந்த எம்பி ரவீந்திரநாத்குமார்,  இரவு 9 மணியளவில் கம்பத்திற்கு வந்தார். அவரது காரை இஸ்லாமிய கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். ஆனால், காரை நிறுத்துவது போல் நிறுத்தி வேகமாக டிரைவர் எடுத்ததால், கருப்புக்கொடி காட்ட வந்தவர்கள் கீழே விழுந்தனர். பின்னர் அங்கிருந்து ரவீந்திரநாத்குமார் வேகமாக சென்று விட்டார். ஆனாலும், காரை அவர்கள் மறிக்க முயன்றதால் போலீசார் லேசாக தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர், கருப்புக்கொடி காட்ட வந்த தங்களை காரை ஏற்றிக் கொல்ல பார்த்ததாக கூறி கம்பத்தில்  மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவிற்கு எதிராகவும், ேதனி எம்பிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை போலீசார் கைது செய்தனர்.

Tags : Theni ,AIADMK ,Voting , AIADMK MP , voting , favor of the Citizenship Act
× RELATED பெரியகுளம் நகரில் அதிமுக வேட்பாளர்...