×

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல்களை தடுக்க உளவுத்துறை தீவிர கண்காணிப்பு: குடியரசு தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வேலூர்: குடியரசு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தீவிரவாத ஊடுருவல்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளை, தமிழக கியூ பிரிவு போலீசார் கடந்த 7ம் தேதி பெங்களூரில் கைது செய்தனர். அவர்களை 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கர்நாடகம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரவாத உறுப்பினர்கள் இருப்பது, எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிக்கு ஆதரவு அளித்தது,

வரும் 26ம் தேதி கொண்டாடப்படவுள்ள 71வது குடியரசு தினத்தில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பது என்பது உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்தன்று அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாள தேசிய புலனாய்வு முகமை எச்சரித்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உளவுத்துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குடியரசு தினத்தையொட்டி குறிப்பிட்ட இடங்கள் பட்டியலிடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக லாட்ஜ்களில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருப்பவர்கள், தற்போது தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அடையாள ஆவணங்கள் இல்லாமல் யாரையும் லாட்ஜ்களில் அனுமதிக்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்காக லாட்ஜ் உரிமையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். மேலும் பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்களை பட்டியலிட்டு விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையில் சிபாரிசு என்ற பெயரில் யாராவது குறுக்கீடு ெசய்தால், அவர்களையும் பட்டியலில் இணைத்து விசாரணை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Vellore ,district ,Republic Day ,Thiruvannamalai , Vellore, Thiruvannamalai, extremist infiltration, intelligence
× RELATED போலீஸ்காரரை பிளேடால் வெட்டிய...