திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது: இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்  பண்ணாரிஅம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி  வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக  இரு மாநிலங்களுக்கிடையே பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று  வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி சென்ற லாரி ஒன்று, 26வது கொண்டை ஊசி  வளைவில் திரும்பும்போது லாரியின் பின்புற டயர் வெடித்து நகரமுடியாமல்  நின்றது.
இதன்காரணமாக மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் சாலையின் இருபுறமும் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர்  செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரி பழுது நீக்கப்பட்ட பின்  போக்குவரத்து சீராகும் என போலீசார் தெரிவித்தனர். இதன்காரணமாக இருமாநில  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Thimpam Mountain , Timbam Mountain Road, Lorry Repair
× RELATED போக்குவரத்துத்துறை முறைகேடு வழக்கில்...