இதுதாயா உண்மையான கட்சி விசுவாசம்: ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு 'காங்கிரஸ்'என பெயர் சூட்டிய தொண்டர்

ஜெய்பூர்: இந்தியாவில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என பல்வேறு கட்சிகள் உள்ளன. கட்சியின் மீது அல்லது கட்சி தலைவர்கள்  மீது அதிக பாசம் வைக்கும் தொண்டர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்சி தலைவர்கள் பெயர் வைப்பது மற்றும் தலைவருக்கு கோயில் கட்டுவது,  தலைவர் புகைப்படத்தை சட்டையின் முன் பையில் வைப்பது, வாகனங்களில் பெயர் அச்சிடுவது என்ன பல்வேறு விதமாக தனது பாசத்தை  வெளிப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் தனது கட்சி மீது வைத்துள்ள விசுவாசம் பொதுமக்கள் மத்தியில், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றும் வினோத் ஜெயின் என்பவர் தனது மகளுக்கு காங்கிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.

தங்கள் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த குடும்பம் என்றும் இந்த குழந்தையும் 18 வயதாகும் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படும் என்று தந்தை வினோத் ஜெயின் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பின்னர் வினோத் ஜெயின்-க்கு பிறந்த 2-வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பெண் குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Tags : volunteer ,Congress ,Rajasthan ,baby , This is true loyalty: Volunteer who named her children 'Congress' in Rajasthan
× RELATED வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு