மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

மதுரை: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வழக்கை ஜனவரி 23-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து ஆணையிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏற்கனவே 4 வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தொடர்ந்து அவகாசம் கோருவதை ஏற்க முடியாது, எனவே கால அவகாசம் வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு 3 வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.


Tags : municipalities ,elections ,Corporation ,State Election Commission ,Respondent ,Case , Corporation, Municipalities, Local Elections, Conduct, Case, State Election Commission, Respondent, Order
× RELATED தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு...