அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் செல்போனை ஹேக் என புகார்..: ஹேக்கிங் குற்றச்சாட்டுக்கு சவுதி அரபிய அரசு மறுப்பு!

உலகின் நம்பர்-1 பணக்காரரும், அமேசான் நிறுவனத்தின் தலைவருமான ஜெஃப் பெசோஸின் செல்போனை வாட்ஸ் அப் வாயிலாக சவுதி அரசு ஹேக் செய்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் மேற்பார்வையில் இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாக பெசோஸ் நியமித்த வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்மூலமே பெசோஸின் அந்தரங்க படங்கள் வெளியானதாகவும், அதை பார்த்து தான் ஜெஃப் பெசோஸை அவரது மனைவி விவாகரத்து செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை சவுதி அரசு மறுத்துள்ளது. சவுதி மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என்றும், பெசோஸின் குற்றச்சாட்டு தொர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அந்நாடு கூறியுள்ளது. பெசோஸ், அமெரிக்காவில் வெளியாகும் பிரபல வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் அதிபருமாவார். அந்த நாளிதழ் உலகத்தலைவர்களை அஞ்சாமல் விமர்சனம் செய்யக்கூடிய ஒன்று. இதனால், பெசோஸ் மீது இளவரசர் முகமது பின் சல்மான் உள்பட உலக அரசியல் தலைவர்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தான், பெசோஸின் வாட்ஸ் அப் எண்ணிற்கு இளவரசர் சல்மானின் சொந்த எண்ணில் இருந்து வீடியோ ஃபைல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதுவே அவரது செல்போனை ஹேக் செய்ய வித்தாக அமைந்துவிட்டது என்பது வல்லுநர்களின் புகார் ஆகும். இதற்கிடையில், இது தொடர்பாக சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் நேரடியாக அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸுக்கு வாட்ஸ் அப் செய்துள்ளார். அதில், ஜெஃப் உங்கள் மீது எங்களுக்கு கோபம் எதுவும் இல்லை. உங்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்.

அந்த செய்தி எதுவும் உண்மை கிடையாது. தவறான செய்திகளை பலர் பரப்பி வருகிறார்கள். தவறான செய்தி பல நாட்களாக இந்த வதந்தியை பரப்பி வருகிறார்கள். உங்களுக்கு உண்மை தெரியும். உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். சவுதி அரசு அதிகாரிகள் யாரும் அமேசான் மீது கோபத்தில் இல்லை. இந்த செய்திகளை நீங்கள் நம்ப வேண்டாம். உங்களிடம் இது தொடர்பாக விரிவாக பேசுகிறேன் என்று சல்மான் அமேசான் அதிபரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

Related Stories: