சைபர் செக்யூரிட்டி சந்தேகங்களுக்கு தீர்வுகள்

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். சில சமயம் விடுமுறை நாட்களில் வீட்டில் லேப்டாப் மூலமாக அலுவலக வேலையை work from home முறையில் செய்வதுண்டு. என்னுடைய லேப்டாப்பிற்கு நான் செக்யூரிட்டி பாதுகாப்பு அமைத்து இருக்கிறேன். அப்படி இருந்தும் சில சமயம் என்னுடை லேப்டாப் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப் படுகிறது. மேலும் என் அலுவல ரீதியாக விவரங்களை என் லேப்டாப்பில் நான் வைத்துள்ளேன். வைரஸ் தாக்குதலால் அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதா? அதனை எவ்வாறு பாதுகாப்பது. என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும். அதற்கு வேறேதேனும் சிறப்பு செக்யூரிட்டி பாதுகாப்பினை ஏற்பாடு செய்ய வேண்டுமா? ஆலோசனை வேண்டும்.

- ரவிசந்தர்,

திருநெல்வேலி.

டேட்டா ஜாக்கிரதை!

“நம்முடைய லாப்டாப், டெஸ்க்டாப், ஏன்செல்போனைக் கூட அனைத்தையும் நாம் இன்டர்நெட்டுடன் தான் இணைத்து செயல்படுகிறோம். இதை நாம் மட்டும் பயன்படுத்தினால் பரவாயில்லை. நம் குழந்தைகளிடமும் விளையாடுவற்கு தருகிறோம். அவர்களுக்கு எது வைரஸ் அட்டாக் மற்றும் சாதாரண செய்தி என்று தெரியாது. அவர்கள் ஏதே ஒரு செய்தி வந்துள்ளது என்று அதை கிளிக் செய்துவிட்டால் அவ்வளவு தான்... உங்க செல்போன், லேப்டாப் மற்றும் டெஸ்டாப் எல்லாவற்றையும் வைரஸ் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உங்களின் அனைத்து விவரங்களும் திருடப்படும்’’ என்கிறார் கே7 கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் புருஷோத்தமன். கே7, கடந்த 27 வருடங்களாக இயங்கி வரும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம்.

எப்படி நிறுவுவது?

மிகவும் சுலபம். எல்லாமே இன்டர்நெட் என்றாகிவிட்டது. அதனால் இந்த சாஃப்ட்வேரை நீங்கள் உங்க கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்வது மிகவும் எளிது. முதலில் கே7 சாஃப்ட்வேர் இணையத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அதனை உங்க கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யுங்கள். இதற்கு ஒரு வருட கட்டணம் செலுத்தினால் போதும். உடனடியாக டவுண்லோடாகிடும். ஒரு முறை டவுண்லோட் செய்தால், ஒரு வருடம் வரை தான் இது செல்லுபடியாகும். அதன் பிறகு மீண்டும் இதனை புதுபித்துக் கொள்ளவேண்டும். இது போல் பல சைபர் செக்யூரிட்டிகள் உள்ளன. அவை எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள். கே7 இந்திய நிறுவனம் மேலும் இதற்கென தனிப்பட்ட சர்வர்கள் இருப்பதால், உங்களின் தகவல்கள் என்றும் பாதுகாப்பாக இருக்கும்.

சைபர் செக்யூரிட்டி என்றால் என்ன?

ஒருவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் அல்லது செல்போன் எதுவாக இருந்தாலும், அவர்கள் அதில் பதிவு செய்திருக்கும் தகவல்களை பாதுகாப்பது தான் சைபர் செக்யூரிட்டி. டேட்டா செக்யூரிட்டி மற்றும் டிவைஸ் செக்யூரிட்டி என இரண்டு விதமான பாதுகாப்பினை இந்த சைபர் செக்யூரிட்டி ஏற்படுத்தும். அதாவது நீங்கள் சேமித்து வைத்து இருக்கும் தகவல்கள் உங்களின் செல்போன் அல்லது கம்ப்யூட்டரை விட்டு உங்களை மீறிவெளியே செல்லக்கூடாது. அதே சமயம் உங்களின் டிவைஸ்களை வைரஸ்கள் தாக்கும் போது அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற வேலையை இந்த சைபர் செக்யூரிட்டி சாஃப்ட்வேர்கள் செய்யும். தற்போது உங்களின் அனைத்து வைரஸ் மற்றும் ரேன்சம்வேர் அட்டாக், ஹாக்கிங் அனைத்தையும் கே7 செக்யூரிட்டி சாஃப்ட்வேர் கொண்டு பாதுகாக்கலாம்.

எப்படி வேலை செய்யும்?

முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் இதனை தரவிறக்கம் செய்யவேண்டும். அதன் பிறகு இந்த சாஃப்ட்வேர் உங்களின் கணினியில் பின்னணியில் தானாகவே இயங்கிக் கொண்டு இருக்கும். ஏதாவது வைரஸ் உங்களின் கம்ப்யூட்டரை பாதித்தால் அது உங்களின் கம்ப்யூட்டரை தாக்காமல் பாதுகாக்கும். மேலும் நிறுவனத்தில் இந்த சாஃப்ட்வேர் குறித்த ஆய்வுக் குழு தனியாக செயல்பட்டு வருவதால். ஒரு வருடத்தில் 24 முறை இந்த சாஃப்ட்வேரை அப்டேட் செய்கிறார்கள். அதாவது தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. நாம் ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்தால், அதை தகர்க்க ஒரு குழு வேலைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கும்.

அவர்கள் என்ன மாதிரியான தாக்குதல்களை ஏற்படுத்துவார்கள். அதற்கு என்ன தீர்வு என்று வருடம் முழுவதும் ஆய்வு நடந்துக் கொண்டு இருக்கும். இணைய ஊடுருவல் எப்போது எப்படி நடக்கும் என்று தெரியாது. அதனால் நாம்தான் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சைபர் செக்யூரிட்டி உங்கள் கணினியில் இருந்தால், உங்களின் கம்ப்யூட்டரை யாராலும்  ஹேக் செய்ய முடியாது.

என்னதான் தீர்வு?

எல்லாமே இன்டர்நெட் மயமாகிவிட்டது. ஒரு சாஃப்ட்வேரை டவுண்லோட் செய்தால் கிடைக்கும் நன்மை ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகளும் அதிகம். அதனால் இன்டர்நேட் பயன்படுத்துவது தவறில்லை. தேவையானதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எங்கு போனாலும் ப்ரீ வைஃபை உள்ளது. அதனை நீங்கள் பயன்படுத்துவது மூலம் பாதுகாப்பா என்று முதலில் உணரவேண்டும். சைபர் செக்யூரிட்டி மூலம் உங்களின் வைஃபை பாதுகாப்பானதா இல்லையா என்று தெரிந்துக் கொள்ள முடியும். மேலும் இப்போது ஒவ்வொரு நாடுகளுக்கு இடையே மிகப் பெரிய போர் என்றால் சைபர் போர் தான். நம்முடைய நாட்டில் தகவல்கள் தான் மற்றொரு நாட்டின் வெற்றி, அதனால் அரசு மட்டும் இல்லை தனி நபர் மற்றும் நிறுவனங்கள் கண்டிப்பாக சைபர் செக்யூரிட்டியினை பயன்படுத்துவது அவசியம்.

எப்படி அட்டாக் செய்வார்கள்?

உதாரணத்துக்கு ரான்சம்வேர்ன்னு ஒரு வைரஸ் அட்டாக் இருக்கிறது. அது தான்இப்போ லேட்டஸ்ட். அது உங்களின் கணினியை தாக்கினால், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து தகவல்களையும் எளிதாக திருட முடியும். அதாவது உங்களுக்கு பின் உங்களின் தகவல்களை உங்களுக்கு தெரியாமலே அவர்கள் ஆப்பரேட் செய்துக் கொண்டு இருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு வங்கியில் நீங்கள் நெட்பேங்கிங் வசதி வைத்து இருப்பீர்கள்.

இந்த வைரஸ் உங்க கணினியை தாக்கினால், நீங்கள் பயன்படுத்திய வங்கியின் இணையத்தை போலவே வேறு ஒரு டூப்ளிகேட் இணையத்தில் நீங்க உங்க வங்கி கணக்கு அனைத்தையும் ஆப்பரேட் செய்துக் கொண்டு இருப்பீர்கள். விளைவு உங்களின் பணம் திருடப்படும். அதனால் தனிநபரோ அல்லது நிறுவனங்களோ தங்களின் தகவல்களை பாதுகாப்பது அவர்களின் முக்கிய கடமை.

எதிர்கால விபரீதங்கள்:

இப்ப இருக்கிற தாக்குதல் ரேன்சம்வேர் வைரஸ். எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் வைரஸ் அட்டாக உருவாகும். வைட்காலர் கிரைம் அதிகமாகும். அது ஒருவரின் தொழிலை பெரிய அளவில் பாதிக்கும். எல்லாமே இணையம் மூலமாக திருட்டு அதிகமாகும். கார்ப்பரேட் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும். இதில் மற்றொரு திருட்டும் இருக்கும். அதாவது நீங்க சென்னையில் இருப்பீங்க. உங்கள் நண்பர் வெளியூரில் இருப்பதாகவும், அவரிடம் பணம் இல்லை என்றும். அதனால் அவருக்கு பணம் அனுப்புமாறு ஒரு செய்தி வரும். அல்லது ஒருவரிடம் நிறைய சொத்து இருப்பதாகவும், அதை அவர் இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் அதை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் என்பது போன்ற செய்தி உங்களின் ஈமெயிலில் வரும். அந்த செய்தியில் ஒரு லிங்க் குறிப்பிட்டு இருப்பாங்க.

அதை நீங்கள் கிளிக் செய்த அடுத்த நிமிடம் உங்களின் மொத்த தகவல்களையும் அவர்களுக்கு சென்றிடும். அல்லது உங்களின் கம்ப்யூட்டரை அவர்கள் ஹேக் செய்திடுவார்கள். சில சமயம் சில அரசியல் கட்சியின் இணையங்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த இணையங்களை கூட ஹேக் செய்யப்படுகிறது.

தொகுப்பு: ப்ரியா

Related Stories: