×

தீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்ததாக 5 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு

சென்னை: தீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்ததாக 5 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. தீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு வழங்கிய விவகாரத்தில் நேற்று என்.ஐ.ஏக்கு வழக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தில் பெங்களூரில் தான் அதிரடியாக க்யூ பிரிவு  போலீசார் கைது செய்தார்கள். முகமது அமித்கான், முகமது இம்ரான்கான் மற்றும் அப்துல் ஆகியோரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில்,அடுத்தடுத்ததாக தமிழகத்திலும், பெங்களூரிலும் சேர்ந்து சுமார் 10 பேர் இந்த தீவிரவாத அமைப்புகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக 200க்கும் மேற்பட்ட சிம்கார்ட்களை இவர்கள் தயாரித்து கொடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் போலி பாஸ்போர்ட் வாங்கி கொடுத்த விவகாரத்திலும், வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளை மத்திய அரசு மற்றும் உளவுத்துறைக்கு தெரியாமல் தொடர்பு கொள்வதற்காக புதிய ரக சாப்ட்வேர்களை உருவாக்கும் விவகாரத்திலும் இவர்களுக்கு பல்வேறு வசதிகளை இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் செய்து கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. தமிழக க்யூ பிரிவு  போலீசார் பெங்கலூருவில் 3 பேரையும், அதேநேரத்தில் தமிழகத்தில் 5 பேரையும் கைது செய்திருந்தார்கள். இவர்களை கைது செய்து விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் தீவிரவாத அமைப்புகளுக்கு பல பேருடன் தொடர்பு இருக்கும் காரணத்தினால் இந்த விவகாரத்தை என்.ஐ.ஏக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில் இந்த வழக்கானது மாற்றப்பட்டு முதற்கட்டமாக தமிழகத்தில் கைதான 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூருவில் கைதான 5 பேரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு பெங்களூர் போலீசார் மூலம் இந்த வழக்கில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கைது செய்யப்பட்ட லியாகத் அலி, பச்சையப்பன், ராஜேஷ், அன்பரசன், அப்துல் ரகுமான் உள்ளிட்ட  5 பேர் மீது வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்ததாக மீதமுள்ள நபர்களையும் சேர்த்து இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : NIA ,extremist organizations ,Prosecutions , Extremist organization, simcard, sales, 5 people, NIA, litigation
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை