ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு சுற்றுச்சுழல்துறை அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசு உத்தரவை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் 500-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு சுற்றுச்சுழல்துறை அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை பிறப்பித்தது. குறிப்பாக மத்திய அரசின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களுடன் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி அவர்களுடைய பங்களிப்பை பெற்று அதன்படியே அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.

Advertising
Advertising

தற்போது கருத்துகேட்பு கூட்டமே தேவையில்லை என்று அனுமதி கொடுப்பதாக தெரிவித்தனர். இதனால் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்ட திருவாரூர் கடலூர், நாகை போன்ற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மாணவ, மாணவியர்கள் திடீரென ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இல்லையென்றால் நாளைமுதல் அனைத்து கல்லூரிகளிலும் போராட்டத்தை முன்னெடுப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: