கிராமங்களில் இருந்து தேனிக்குள் சப்ளையாகும் பாலித்தீன் பைகள்: தடுக்க முடியாமல் திணறும் நகராட்சி

தேனி: தேனியில் கிராமங்களில் இருந்து பாலித்தீன் பைகள் நகர்பகுதிக்குள் சப்ளையாகின்றன. இதனை தடுக்க முடியாமல் நகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.பாலித்தீன் பைகளுக்கு அரசு தடை விதித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. தடை விதிக்கப்படும் முன் பகிரங்கமாக வலம் வந்த இந்த பாலித்தீன் பைகள், தடைக்கு பின்னர் திரைமறைவில் நடமாடுகின்றன. ஆனால் இவற்றின் பயன்பாடு குறையவில்லை. குறிப்பாக தேனியில் மீன்கடைகள், இறைச்சி கடைகளில் இந்த பைகள் மறைமுகமாக நடமாடுகின்றன. தேனியை சுற்றி உள்ள கிராமங்களில் இவற்றை பதுக்கி வைத்துள்ள வியாபாரிகள், தேனிக்குள் டூ வீலரில் கொண்டு வந்து கடை, கடைக்கு சப்ளை செய்கின்றனர்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் கூறியதாவது: தேனி நகராட்சியில் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த ஒரு நபர் பாலித்தீன் பைகளை விநியோகம் செய்தார். அவரை நாங்கள் பிடிக்க முயன்றோம். அவரது ெஹல்ெமட் பைகளை அப்படியே போட்டு விட்டு டூவீலரில் தப்பிவிட்டார். இவரை பிடிக்க நாங்கள் ரகசிய இன்பார்மர்களை நியமித்துள்ளோம்.

போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். இவர் மட்டுமல்ல, கிராமங்களில் தனியாக உள்ள தோட்டத்து வீடுகளில் பாலீதீன் பைகளை பதுக்கி வைத்து தேனியில் குறிப்பிட்ட நேரத்தில் ரகசியமாக வந்து விநியோகம் செய்து விட்டு செல்கின்றனர்.

இதைவிட மிகப்பெரிய தலைவலி பேக்கிங்கில் வரும் பாலித்தீன்கள்தான். இவற்றை சேகரித்து அழிப்பது மிகுந்த சவாலான பணியாக உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. மக்கள் பாலித்தீன் பைகளில் பேக்கிங் செய்யப்படும் பொருட்களின் பயன்பாடுகளை குறைத்தால் தான், நகரின் துாய்மையை பாதுகாக்க முடியும்’ என்றார்.

Related Stories: