தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவினையொட்டி யாக சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்

தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு வருகின்ற 5ம் தேதி நடைபெறக்கூடிய சூழ்நிலையில் அதை தமிழில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதனை எதிர்த்து ஒரு மாநாடும் நடத்தினார்கள். அரசுக்கு வேண்டுகோளாகவும் வைத்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், அதற்கான பணிகள் என்பது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இருந்த பொழுதிலும் சமஸ்கிருதத்திலேயே தற்பொழுது குடமுழுக்கு நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ள நிலையிலும், தற்போது வரை அதற்கான அதிகாரிகளோ, பணியாட்களோ இதுவரை இங்கு வரவில்லை என கூறப்படுகிறது.  கும்பாபிஷேக பணியின் போது பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Advertising
Advertising

பாதுகாப்பு ஏற்படுக்காக காவல்துறையினர் ஏரளாமானோர் குவிக்கப்பட்டு, பக்தர்கள் எவ்வகையில் உள்ளே வரவேண்டும், எப்படி வெளியே செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகளையும், அதேபோல பாதுகாப்பாக கும்பாபிஷேகத்தை எப்படி செய்வது உள்ளிட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளை கொண்டு காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தி வருகிறது. இருப்பினும் தமிழில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். அதற்கான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 27ம் தேதி வருகின்ற சூழலில் தீர்ப்பானது தங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் 28ம் தேதி முதல் தொடர் போராட்டமும், அதேபோல ஒத்துழையாமை இயக்கம் மேற்கொள்ளப்போவதாக நேற்றைய மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவலும் அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கும்பாபிஷேகத்திற்கு முதல்கட்ட பணியாக ஹோமம் வளர்கின்ற நிகழ்ச்சி சமஸ்கிருதத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் அஷ்டபந்தன மருந்துகள், சுவாமிகளுக்கு பூசக்கூடிய பணியும், அதனை சரிசெய்யக்கூடிய பணியும் தொடங்கியுள்ளது. கடந்த முறை யாக சாலைகள் உள்ளே இருந்த காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது. அதனை கருத்தில் கொண்டு இந்த முறை யாக சாலைகள் வெளியே அமைக்கப்பட்டுள்ளது.  கும்பாபிஷேகத்திற்காக கோவிலை சுத்தம் செய்யும் பணிகளும், பராமரிப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Stories: