தள்ளாடும் தங்கத்தின் விலை: ஒருநாள் குறைவு, மறுநாள் உயர்வு....இன்று சவரன் ரூ.16 உயர்ந்து ரூ.30,520-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,815-க்கும் ஒரு சவரன் ரூ.30,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது.

தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. இந்த மாதம் தொடக்கம் முதல் உயர்ந்து கொண்டே வந்த தங்க விலை, திடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தங்க விலை சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து 30,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச்சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: