×

மாமூல்,கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட காரைக்கால் பெண் தாதாவான எழிலரசி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: போலீசார் அதிரடி

புதுச்சேரி: புதுவை மாநில பெண் தாதா எழிலரசி மீண்டும் கைது செசய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தை உடைத்து சிறையில் இருந்து விடுதலையான அவர், மாமூல் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் கைது செய்திருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல சாராய வியாபாரி ராமு. இவருடைய இரண்டாவது மனைவி தான் எழிலரசி. குடும்ப தகராறு காரணமாக ராமுவை அவரது முதல் மனைவி வெட்டி கொலை செய்தார்.  தனது கணவருடைய கொலைக்கு பழிக்கு பழியாக எழிலரசி கூலிப்படை மூலமாக ராமுவின் முதல் மனைவி வினோதா, அவருக்கு உதவிய ஐயப்பன், மூன்றாவதாக முன்னாள் சபாநாயக்கர் வி.எம்.சி.சிவகுமாரை கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வி.எம்.சி.சிவகுமார் கொலை வழக்கில் காரைக்கால் போலீசார் எழிலரசியை கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.

இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த எழிலரசி, இரண்டே மாதங்களில் வெளியே வந்தார். வெளியே வந்தவர், நான் ரவுடி தொழிலை கைவிட்டு பொதுமக்களுக்கு சேவை செய்ய விருப்பப்படுகிறேன். இதற்காக வருகின்ற சட்டசபை தேர்தலில் காரைக்காலில்  போட்டியிட்டு வெற்றி பெற போகிறேன். ஆதலால் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று காரைக்கால் மக்களை சந்தித்து கோரிக்கையை முன்வைத்தார். இந்த நிலையில் தான் எழிலரசி காரைக்கால் பகுதியில் உள்ள மதுபான கடையில் பணம் கேட்டு மிரட்டுதல், காலியாக உள்ள மனைகளை கட்ட பஞ்சாயத்து மூலம் வாங்குதல் உள்ளிட்ட 10 புகார்கள் காரைக்கால் போலீசாருக்கு வந்தது. இதையடுத்து எழிலரசியை கைது செய்ய திட்டமிடப்பட்டது.

அந்த நேரத்தில் எழிலரசி பெங்களூர் - சென்னை வேளச்சேரி பகுதியில் முகாமிட்டிருந்தார். இதனை தொடர்ந்து எழிலரசி அவருடைய வீட்டில் பதுக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் எழிலரசியை கைது செய்தனர். அவர் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. தற்போது எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. எழிலரசி மீது 3 கொலை வழக்குகள் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பெண் தாதா எழிலரசியை புதுச்சேரி சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Karaikal ,law enforcement arrest , Mamool, kattappanayayattu, Karaikal girl Dad, elairasi, arrested
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...