திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் லாரி மோதியது

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் லாரி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.அதிகபாரம் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் திம்பம் மலைப்பாதையில் பாரம் தாங்காமல் நின்றுவிடுவதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர் கதையாக உள்ளது. நேற்று மதியம் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அரிசி பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது.

21வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதி நகரமுடியாமல் நின்றது. லாரி சாலையோரம் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல், ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி சாலையாரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Related Stories: