காமராஜர் சாலையில் 3-வது நாளாக குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது மரியாதை செலுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அணிவகுத்துச் சென்றன. காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறையினரின் மோட்டார் வாகன சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பிற மாநிலத்தவரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Advertising
Advertising

Related Stories: