தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய17 லட்சம் பேர் விண்ணப்பம்: இம்மாத இறுதியில் அடையாள அட்டை விநியோகம்

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய 17 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு இந்த மாத இறுதியில் இருந்து அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 6,00,01,329 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள்  2,96,46,287, பெண்கள் 3,03,49,118, மூன்றாம் பாலினத்தவர் 5,924 பேர்.இதைதொடர்ந்து, 2020 ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், நீக்கம், திருத்தம் செய்ய டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரை (நேற்று) விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாமும் நடந்தது. இந்த 4 நாட்கள் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் அதிகம் பேர் கலந்துகொண்டு தங்கள் பெயர்களை சேர்க்கவும், முகவரி மாறியவர்கள் திருத்தம் செய்யவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Advertising
Advertising

நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் மட்டும் 12 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தனர். அதேபோன்று, அலுவலக நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று வரை, வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13,16,921 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 4 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று கூறியதாவது: கடந்த ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேரும், நீக்கம் செய்ய 1,02,210 பேரும், திருத்தம் செய்ய 1,73,926  பேரும், முகவரி மாற்றம் செய்ய 1,08,548 பேரும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 57 பேர் என மொத்தம் 17,01,662 பேர் விண்ணப்பம்  செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய விண்ணப்பம் அளித்த 17 லட்சம் பேரின் வீடுகளுக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தும் பணியில் ஈடுபடுவார்கள். அப்போது, விண்ணப்பம் கொடுத்த முகவரியில் அவர்கள் வசிப்பதை உறுதி செய்து கொள்வார்கள்.  வீடுகளுக்கு வந்து விசாரிக்கும்போது விண்ணப்பம் செய்தவரின் அனைத்து தகவல்களும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.பின்னர் வருகிற 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் முதல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கும். இந்த மாத இறுதியில் இருந்து பிப்ரவரி மாதத்திற்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டம் வாரியாக விண்ணப்பித்தவர்கள் விவரம்

மாவட்டம்    பெயர் சேர்க்க    வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நீக்கம்    திருத்தம்    முகவரி  மாற்றம்    மொத்தம்

சென்னை    55475    11    2447    8227    9276    75436

திருவள்ளூர்    76618    0    1632    8258    5153    91661

காஞ்சிபுரம்    89454    1    3569    8054    6047    107125

வேலூர்    57469    2    3986    19930    4865    86252

கிருஷ்ணகிரி    42038    0    3009    5074    2919    53040

தர்மபுரி    31010    0    3400    2891    1788    39089

திருவண்ணாமலை    40859    0    3831    4374    2541    51605

விழுப்புரம்    67935    3    3392    6714    3901    81945

சேலம்    63465    0    11178    8788    6018    89449

நாமக்கல்    31175    2    5922    5601    4310    47010

ஈரோடு    39988    0    7644    5547    3210    56389

நீலகிரி    9439    0    739    1657    1254    13089

கோவை    81159    4    6384    10072    8192    105811

திண்டுக்கல்    39359    0    945    4448    3178    47930

கரூர்    19697    0    2128    3263    2798    27886

திருச்சி    47870    1    1746    7206    5179    62002

பெரம்பலூர்    12773    2    647    2647          738    16807

கடலூர்    40301    6    3101    6257    2829    52494

நாகப்பட்டினம்    25337    0    2405    3060    1658    32460

திருவாரூர்    19995    0    7099    2412    1490    30996

தஞ்சாவூர்    45118    0    3482    5307    3511    57418

புதுக்கோட்டை    37138    4    722              2941     1757    42562

சிவகங்கை    25117    9    1016    2848    2000    30990

மதுரை    56914          4    6417    4727    3677      71739

தேனி    23161    0    1150    2466    1752          28529

விருதுநகர்    42101    0    3040    5081    3662    53884

ராமநாதபுரம்    14811    2    1335    2415    1158    19721

தூத்துக்குடி    29903    1          1252    4300    3251    38707

திருநெல்வேலி    52240    1    2849          9063    4384    68537

கன்னியாகுமரி    35939    3    2383    2719    1132    42176

அரியலூர்    13014    0    190    898    462    14564

திருப்பூர்    50049    1    3170    6681    4458    64359

மொத்தம்    13,16,921    57    1,02,210    1,73,926    1,08,548    17,01,662

Related Stories: